சேலத்தில் கூரை வீடு சரிந்து விபத்துக்குள்ளானதில் முதியவர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்

Sep 16 2020 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலத்தில், கூரை வீடு சரிந்து விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். பெரமனூரில், கூரை வீட்டில் வசித்து வரும் லட்சுமி அம்மாள் என்பவர், மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக, வீட்டை பூட்டிவிட்டு, வெளியே சென்றுள்ளார். அந்த நேரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி, ஆறுமுகம், பன்னீர்செல்வம், தர்மதுரை ஆகிய 4 பேர், லட்சுமி அம்மாளின் வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக கூரை சரிந்து விபத்துக்குள்ளானதில், கந்தசாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 3 பேரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால், வீட்டின் சுவர் வலுவிழந்து இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் என, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00