சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

Sep 17 2020 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக, உரிமை மீறல் குழு 2வது முறையாக அனுப்பிய நோட்டீஸ் மீது உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சியினர், கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்றத்தில் அந்த பொருட்களை கொண்டு வந்து சபாநாயகரிடம் காண்பித்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்‍கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திரு. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் சபாநாயகர் புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம் என தெரிவித்திருந்தது. இதனடிப்படையில், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00