பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாள் - பெரியாரின் திருவுருவ சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மரியாதை

Sep 17 2020 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 142- பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்‍கு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தருமபுரி கிழக்‍கு மாவட்ட கழகம் சார்பாக, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கட சமுத்திரம் கிராமத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்‍கு, கழக துணைப் பொதுச் செயலாளரும், தருமபுரி கிழக்‍கு மாவட்ட கழக செயலாளருமான திரு.பி.பழனியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்‍கு இனிப்புகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாண்புமிகு அம்மா அவர்களால், பெரியார் விருது வழங்கி கௌரவிக்‍கப்பட்ட திரு.வி.ஆர்.வேங்கனுக்‍கு, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.பி.பழனியப்பன் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், கழக அமைப்புச் செயலாளர் அருர் திரு.ஆர்.ஆர்.முருகன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் திரு.கௌதமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சென்னை வேளச்சேரி பகுதி அமமுக சார்பில் தந்தை பெரியாரியாரின் பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்தப்பட்டது. தரமணியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவப் படத்திற்கு, வேளச்சேரி பகுதி கழக செயலாளர் திரு. சந்திரபோஸ் தலைமையில் கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கழக மாணவரணி செயலாளர் திரு. J.D. கார்த்திக், தென்சென்னை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு கழகச் செயலாளர் திரு.ஜிம். பாஷா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பரங்கிமலை ஒன்றிய கழகம் சார்பில், மேடவாக்கத்தில், பரங்கிமலை ஒன்றிய கழக செயலாளர் திரு.கு.காளிதாஸ் தலைமையில் கழக நிர்வாகிகள் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேடவாக்கம் ஊராட்சி கழக செயலாளர் தி.கு.செல்வகுமார் அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு.சீனிவாசன் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகரக்‍ கழகம் சார்பில், மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் பூக்‍கடை திரு.சேகர் தலைமையில், எடப்பாடி பேருந்து நிலையத்திலும், சேலம் புறநகர் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் எடப்பாடி பி.ஏ. ராஜேந்திரன் தலைமையிலும், தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தந்தை பெரியாரின் 142 வது பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பம்பல் நகர கழக சார்பில், பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகர இணைச் செயலாளர் திரு. லோகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் கிழக்‍கு மாவட்டக்‍ கழகம் சார்பில், பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்‍கு, கிழக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.பொன் ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்‍களுக்‍கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் கிழக்‍கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்‍கு பகுதி சார்பாக, பெரியார் நகரில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்‍கு, திருவொற்றியூர் கிழக்‍கு பகுதியைச் சேர்ந்த திரு.கே.ராமன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவள்ளூர் கிழக்‍கு மாவட்டம் மேற்கு பகுதி கழகம் சார்பில் அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு, திரு.கே.ஏ.குப்பன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில், திருவானைக்காவலில் உள்ள திருச்சி வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில், அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு, கழக தலைமை நிலையச் செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு. ஆர்.மனோகரன் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கழக நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக சார்பில், அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு, கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட அவைத்தலைவர் திரு.சௌந்திரபாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு.லோகநாதன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

உசிலம்பட்டி நகர் கழக சார்பில், நகர செயலாளர் குணசேகர பாண்டியன் தலைமையில் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துப்பட்டது. அதனைதொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

நாகை தெற்கு மாவட்டக்‍ கழகம் திருமருகல் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் கங்களாஞ்சேரி கடைவீதியில், தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்‍கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருமருகள் தெற்கு ஒன்றிய செயலாளர் முகமதுபகுர்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருப்பூர் மாநகர் தெற்கு மாவட்டம், கருவம்பாளையம் பகுதி கழகம் சார்பில், ஏபிடி ரோடு பகுதியில் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு கருவம்பாளையம் பகுதி செயலாளர் திரு.சரவணன் தலைமையில், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட கழக துணைச் செயலாளர் விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மேற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், சிதம்பரம் கஞ்சிதொட்டி பகுதியில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்‍கு, கடலூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், கழக அமைப்பு செயலாளருமான திரு.கே.எஸ்.கே. பாலமுருகன் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்‍களுக்‍கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி கிரேட் காட்டன் சாலையில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவ படத்துக்கு, கழக அமைப்புச் செயலாளர் திரு.ஹென்றி தாமஸ் தலைமையில், கழகத்தினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இதைப்போல் திரேஸ்புரம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவ படத்திற்கு பகுதி செயலாளர் திரு.இன்னாசி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரியாரின் 142-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி பகுதி கழகம் சார்பில், சென்னை அடையாறில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவப் படத்திற்கு, வேளச்சேரி பகுதி கழகத் துணை செயலாளர் திரு. செந்தூர் சுரேஷ் தலைமையில், மாவட்ட கழக இலக்கிய அணி செயலாளர் திரு.சுந்தரம் உள்ளிட்டோர் மலர் தூவி மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தென்சென்னை வடக்கு மாவட்டம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி சார்பில், சென்னை கலைவாணர் அரங்கம் எதிரில் உள்ள பெரியார் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.சுகுமார் பாபு மலர்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். சேப்பாக்கம் பகுதி செயலாளர் எல்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்‌.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.P. ராமுத்தேவர், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிழச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திரு.சவரிமுத்து உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம் கழகம், கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பில் கச்சேரி வீதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு, கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் வழக்‍கறிஞர் திரு. பவானி சம்பத் என்ற முத்துக்குமரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில், விடுதி என்ற கிராமத்தில் உள்ள பெரியார் சிலைக்கு, மாவட்ட செயலாளர் திரு. டி.விடங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில், மாவட்ட கழக செயலாளர் திரு. டிகே. ராஜேந்திரன், நகரில் உள்ள பெரியாரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கழகத்தினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். மாவட்ட கழக, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.மாரே கவுடு தலைமையில், பெரியாரின் திரு உருவபடத்திற்கு மாலை அணிவித்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில், உடன்குடியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் திருவுருவ படத்துக்கு, தெற்கு மாவட்ட செயலாளர் ​திரு.பி.ஆர். மனோகரன் மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழகம் சார்பில், தக்‍கலையில் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மேற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.ஜெங்கின்ஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் தெற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், விழுப்புரம் காந்திசிலை அருகில் இருந்து மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.பாலசுந்தரம் தலைமையில் கழக நிர்வாகிகள் ஊர்வலமாகச் சென்று தபால் நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்‍கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அலங்கரித்துவைக்கப்பட்ட பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.செ.சரவணன் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

புதுச்சேரி மாநிலம் பிள்ளைத்தோட்டத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு, மாநில கழக செயலாளர் வழக்கறிஞர் திரு. வேல்முருகன் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவித்தும், மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்ட இணை செயலாளர் திருமதிகௌசல்யா அன்பு, காரைக்கால் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் திரு. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட அமமுக சார்பில் ஆவடியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் இனிப்புகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கழகக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மத்திய மாவட்டம் மாதவரம் தெற்கு பகுதி அமமுக சார்பில் புழல் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூந்தமல்லி நகர அமமுக சார்பில் குமணன்சாவடியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருத்தணி நகர கழகம் சார்பில் திருத்தணி நகராட்சி அருகே அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் திரு. ம.கரிகாலன் ஆலோசனைப்படி சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர் திரு. செம்மஞ்சேரி குணசேகரன் தலைமையில் செம்மஞ்சேரியில் உள்ள பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பரங்கிமலை ஒன்றிய கழகம் சார்பில், மேடவாக்கத்தில், ஒன்றிய கழக செயலாளர் திரு.கு.காளிதாஸ் தலைமையில் கழக நிர்வாகிகள் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேடவாக்கம் ஊராட்சி கழக செயலாளர் தி.கு.செல்வகுமார் அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு.சீனிவாசன் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கோவையில் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.G.அலாவுதீன் தலைமையில் பெரியார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கோவை புறநகர் மாவட்ட கழகம் சார்பில் பொள்ளாச்சியில் பெரியாரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் CTC முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் கேரள மாநிலம் சித்தூர் தாலுகா பகுதி கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் திரு. அப்துல் கலாம் ஆசாத், திரு. காளிமுத்து ஆகியோர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

திருப்பூர் புறநகர் மாவட்டம் குண்டடம், தாராபுரம், மூலனூர், ஒன்றியங்கள் சார்பில் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அலங்கியம் பேருந்து நிறுத்தம் அருகே தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் சார்பில் மணச்சநல்லூர் பேருந்து நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் திரு.எஸ்.எம். ராஜேந்திரன் தலைமையில் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருச்சி வடக்கு மாவட்ட கழகம் திருவானைக்காவலில் உள்ள அமமுக அலுவலகத்தில், தலைமை நிலையச் செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான திரு. ஆர்.மனோகரன் தலைமையில் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மணலூர்பேட்டை சாலையில் உள்ள அமமுக அலுவலகத்தில் பெரியாரின் திருவுருவ படத்திற்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் காட்பாடி திரு. A S ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
செய்தி வீடியோ


சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00