மதுரை மாவட்டத்தில், 2016-ம் ஆண்டு சத்துணவுப் பணியாளர் காலிப் பணியிடங்களுக்‍கான பணி நியமன அறிவிப்பாணை ரத்து - புதிய அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Sep 18 2020 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டத்தில், 2016-ம் ஆண்டு சத்துணவுப் பணியாளர் காலிப் பணியிடங்களுக்‍கான பணி நியமன அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாகவும், புதிய அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட 13 ஒன்றியங்கள், மதுரை மாநகராட்சி, திருமங்கலம் நகராட்சி ஆகியவற்றில் காலியாக இருந்த 400 சத்துணவு அமைப்பாளர் மற்றும் ​சமையல் உதவியாளர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்கான அறிவிப்பாணையை 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அன்றைய மாவட்ட ஆட்சியாளர் திரு.வீரராகவராவ் வெளியிட்டிருந்தார். இந்த காலிப் பணியிடங்களுக்‍கு ஆயிரக்‍கணக்‍கானோர் விண்ணப்பித்ததையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2017ம் ஆண்டு மே 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட்டது. இந்நிலையில், 2016ம் ஆண்டில் வெளியிடப்பட்ட பணி நியமன அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.டி.ஜி.வினய் அறிவித்துள்ளார். சத்துணவு அமைப்பாளர், சமையல் பணியாளர் ஆகிய காலிப் பணியிடங்களுக்‍கான புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், இந்த பணியிடங்களுக்‍கு ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்‍கலாம் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00