சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - காவலர்களின் ஜாமின் மனு தொடர்பாக, சி.பி.ஐ. விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Sep 18 2020 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை விவகாரத்தில் கைதான காவலர்களின் ஜாமின் மனு தொடர்பாக, சி.பி.ஐ. தரப்பில் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்‍குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக, சிறையில் உள்ள காவலர்கள் முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்து ராஜா ஆகியோர் 2-வது முறையாக ஜாமின் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி திரு. பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கைது செய்யப்பட்டு 80 நாட்களை கடந்து விட்டதால், காவலர்களுக்‍கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதாடினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சிபிஐ தரப்பில் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 28-ம் தேதிக்‍கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00