ரெட்டை மலை சீனிவாசனின் 75-ம் ஆண்டு நினைவு தினம் : மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு, அ.ம.மு.க-வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை

Sep 18 2020 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரெட்டை மலை சீனிவாசனின் 75-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ஒடுக்‍கப்பட்டோரின் உயர்வுக்‍காக பாடுபட்ட ரெட்டைமலை சீனிவாசனின் 75-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்‍கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் சார்பில், கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். கழக தேர்தல் பிரிவு செயலாளரும், தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான திரு. ஜி.செந்தமிழன், கழக பொறியாளர் அணிச் செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளருமான திரு.ம. கரிகாலன், தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. வி. சுகுமார் பாபு, வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.P.சந்தானகிருஷனண், காஞ்சிபுர மாவட்ட செயலாளர் திரு.மொளச்சூர் இரா.பெருமாள், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு.டி.ஏ.ஏழுமலை உள்ளிட்டோர் ரெட்டைமலை சீனிவாசன் திருவுருவச் சிலைக்‍கு மரியாதை செலுத்தினர்.

ஆனால், ரெட்டை மலை சீனிவாசனின் மணிமண்டபத்தில், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்துவதை காட்சி ஊடகங்கள் வீடியோ பதிவு செய்ய காவல்துறை திடீரென அனுமதி மறுத்தது. ரெட்டைமலை சீனிவாசன் நினைவிடத்தில் கேமிராவுடன் மீடியாக்‍கள் உள்ளே செல்ல அனுமதிக்‍கக்‍கூடாது என தங்களுக்‍கு உத்தரவிடப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00