ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் திறப்பு - நாளை மறுநாள் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்தடையும் என தகவல்

Sep 18 2020 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நாளை மறுதினம் பூண்டி ஏரியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் - ஆந்திரா இடையே கிருஷ்ண நதிநீர் பகிர்வு தொடர்பாக ஏற்கெனவே ஒப்பந்தம் போடப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த பருவத்தில் 8 டி.எம்.சி. தண்ணீர் திறக்க தமிழக பொதுப்பணித்துறை ஆந்திர அரசுக்கு ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 1,500 கனஅடி விதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் பூண்டி ஏரிக்கு இந்த தண்ணீர் வந்தடையும் என கூறப்படுகிறது. அங்கிருந்து புழல் ஏரிக்கு கொண்டுவரப்படும் தண்ணீர் பின்னர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு சென்னைக்கு வினியோகிக்கப்படும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00