மருத்துவ மேற்படிப்பில் மாணவர்களின் சேர்க்‍கையை இறுதி செய்யக்‍கூடாது என்ற உத்தரவு ரத்து - தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்ததால் உயர்நீதிமன்றம் உத்தரவு

Sep 18 2020 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்‍கையை இறுதி செய்யக்‍கூடாது என்ற உத்தரவை உயர்நீதிமன்றம் நீக்‍கிவிட்டது.

மருத்துவ மேற்படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்‍கு உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. ஏற்கெனவே ஆகஸ்ட் 31ம் தேதிக்‍குள் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்‍கையை இறுதி செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததால், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனு இன்று மீண்டும் நீதிபதி திரு. ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்‍கு வந்தபோது, தமிழக அரசு கோரிய கால நீட்டிப்பை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டதாக தெரிவிக்‍கப்பட்டது. இதனைப் பதிவு செய்த நீதிபதி, மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்‍கை இறுதி செய்யக்‍கூடாது என ஏற்கெனவே உத்தரவிட்டதை நீக்‍கினார். தொடர்ந்து மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்‍கை பட்டியலை வரும் 25ம் தேதிக்‍குள் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் வழங்கவேண்டும் என தமிழக அரசுக்‍கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, நீட் தேர்வில் தங்களைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்‍கு இடமளிக்‍கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்‍கப்பட்டதால், சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் வரும் செப்டம்பர் 24ம் தேதிக்‍குள் பதிளிக்‍க வேண்டுமென உத்தரவிட்டு, வழக்‍கை நீதிபதி ஒத்திவைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00