பெரம்பலூரில் 2016ம் ஆண்டு மாண்புமிகு அம்மா அவர்களால் தள்ளுபடி செய்யப்பட்ட கறவை மாடு கடன் : கடனை திரும்ப கட்ட சொல்லி கூட்டுறவு வங்கி நோட்டீஸ் அனுப்பியதால் விவசாயிகள் வேதனை

Sep 19 2020 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூர் அருகே தள்ளுபடி செய்யப்பட்ட கறவை மாடு கடனை திரும்ப கட்ட சொல்லி வங்கி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம், விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், ஒகளூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒகளூர், ஆடுதுறை, கழனிவாசல் ஆகிய கிராமங்களை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், கடந்த 2013-2014 ஆம் ஆண்டில் ஒகளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தலா 50 ஆயிரம் வீதம் ரூபாய் கறவை மாடுகள் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடன் பெற்றவர்கள் தலா 36 ஆயிரம் ரூபாய் வரை திருப்பி செலுத்திய நிலையில், 2016-ம் ஆண்டு மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியில், சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது தள்ளுபடி செய்யப்பட்ட கடனை திரும்ப செலுத்த வேண்டுமென்று வங்கி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருப்பது விவசாயிகளை பெரும் குழப்பத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00