சென்னை பாடி அருகே பிரதமர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பலூன் வெடித்து விபத்து : சிறுவர்கள் உட்பட 15 பேருக்கு தீக்காயம்

Sep 19 2020 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை பாடியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாட்டத்தின்போது, பலூன்கள் வெடித்ததில், பத்திரிக்கையாளர்கள், சிறுவர்கள் உட்பட பலருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

அம்பத்தூர் அடுத்த பாடியில், திருவலிதாயம் சிவன் கோவில் முன் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி 2 ஆயிரம் ஹீலியம் பலூன்கள் பறக்க விட, பா.ஜ.வினர் ஏற்பாடு செய்து இருந்தனர். இதனால் கோவில் முன் 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் திரண்டு இருந்தனர். மேலும் பறக்க விடப்படும் நிலையில் பலூன்கள் தயார் நிலையில் இருந்தன. அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டபோது அந்த வெடியில் இருந்து தீப்பொறி பறந்து பலூன்கள் மீது விழுந்ததால் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

பலூன் வெடித்து சிதறியதில் பா.ஜ.க விவசாய அணி மாநில துணை தலைவர், சிறுவர்கள் மற்றும் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் உட்பட 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொரட்டூர் போலீசார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பா.ஜ.கவினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இந்த நிகழ்ச்சிக்கு காவல் நிலையத்தில் அனுமதி பெறாதது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00