குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மனித சங்கிலி போராட்டம் : போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைக்கு தடை

Sep 19 2020 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பள்ளிகளின் நிர்வாகத்திற்கு கல்வித்துறை அதிகாரிகள் அனுப்பிய நோட்டீஸை நிறுத்தி வைத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு பள்ளி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த நோட்டீஸுக்கு ஆசிரியர்கள் அளிக்கும் பதிலை தொகுத்து ஒருங்கிணைந்த அறிக்கை ஒன்றை தயாரித்து அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். அதுவரை கல்வித்துறை அதிகாரிகள் அனுப்பியுள்ள நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00