போலியான ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு செய்த திமுக நிர்வாகி : நிலமோசடி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு

Sep 19 2020 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர், போலி ஆவணம் தயாரித்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை அபகரித்தது குறித்து, போலி பத்திரம் தயாரித்தல், நிலமோசடி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

வேளாங்கண்ணி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கிய இடம் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களை திமுகவை சேர்ந்த கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர், தனது தாயார் மற்றும் தம்பி பெயரில் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து உள்ளார். இதுகுறித்து வழக்கறிஞர் தங்க கதிரவன் என்பவர், நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில், நில அபகரிப்பு பிரிவு போலீசார், திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். இதில் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை, தனது தாயார் ஜெயமேரி, சகோதரர் மரியசூசை நிக்சன் உள்ளிட்ட 6 பேரின் பெயரில் பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, 6 பேரின் மீது நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்கள் தயார் செய்தல், போலியான பத்திரத்தை உண்மையாக பயன்படுத்துதல், நம்பிக்கை மோசடி, பொய்கணக்கு புனைதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, தாமஸ்ஆல்வா எடிசன் மற்றும் 5 பேரை தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00