வட கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் 2 நாட்களுக்‍கு மழை பெய்யக்‍கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Sep 19 2020 11:30AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு வட கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள் மற்றும் புதுவை-காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நிலப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் நௌல் புயலானது வலுவிழந்து, காற்றுழத்த தாழ்வு பகுதியாக மாறி நாளை வடகிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு வரவுள்ளது - இது காற்றுழத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஒரிசா மற்றும் மேற்குவங்க கரையை நோக்கி நகரக்கூடும் - இதன் காரணமாக மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்திலும், தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் வரும் 22-ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. ஆழ்கடல் பகுதிகளுக்கு சென்ற மீனவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00