மனைவியை சித்ரவதை செய்து பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கணவன் கைது - வைரலாகும் சித்ரவதை வீடியோ காட்சிகள்

Sep 19 2020 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டத்தில், மனைவியை கணவன் சித்ரவதை செய்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள நடுவில் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்ராஜன். 53 வயதான அவருக்‍கு எப்சிபா என்ற மனைவி உள்ளார். இருவருக்‍கும் திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், எப்சிபா நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், எப்சிபாவை சுரேஷ்ராஜன் வீட்டில் கட்டிவைத்து சித்ரவதை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரை பெட்ரோல் ஊற்றிக்‍ கொல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது எப்சிபாவின் அலறல் சத்தம் கேட்டு அக்‍கம்பக்‍கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எப்சிபாவை மீட்டு சுரேஷ்ராஜனை கைது செய்தனர். அவர் மீது வரதட்சணைக்‍ கொடுமை, கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்‍குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00