அம்மா இளைஞர்கள் விளையாட்டு திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி - அதிகாரிகளின் துணையுடன் முறைகேடு நடந்துள்ளதாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் குற்றச்சாட்டு

Sep 19 2020 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டத்தில், அம்மா இளைஞர்கள் விளையாட்டு திட்டத்தில் விளையாட்டு உபகரணங்கள் அமைக்‍கப்பட்டதில், அதிகாரிகள் துணையுடன் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.

கிராமப்புறங்களில், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஊராட்சிகள்தோறும் கால்பந்து, கைப்பந்து, உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக டெண்டர் விடப்பட்டு, ஊராட்சிக்‍கு 14 ஆயிரத்து 149 ரூபாய் வீதம் ஒதுக்‍கப்பட்டது. ஆனால் டெண்டர் பெற்ற நிறுவனம், விளையாட்டு உபகரணங்களை அமைத்து தரவில்லை என புகார் எழுந்துள்ளது. தூத்துக்‍குடி மாவட்டத்தில் மட்டும் 422 ஊராட்சிகளில், விளையாட்டு உபகரணங்கள் அமைத்துள்ளதாகக்‍கூறி, 68 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக, பஞ்சாயத்து தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிகாரிகளின் துணையுடன் கொள்ளையடிக்‍கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்‍கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00