சென்னையில் காவல்துறையினர் தாக்கியதால் மனமுடைந்து சானிட்டைசர் அருந்திய கணவர் - நடவடிக்கை எடுக்கக்கோரி மனைவி புகார்

Sep 21 2020 6:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் தாக்கியதால் சானிட்டைசர் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகுமார் என்பவரது மனைவி திருவல்லிக்கேணி துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர் கவிதா என்பவரிடம் 3 லட்சம் ரூபாய் கடனாக பெற்ற நிலையில், வட்டியையும் அசல் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயும் செலுத்தியுள்ளார். இந்நிலையில் கவிதாவின் தூண்டலின் பேரில் நுங்கம்பாக்கம் காவல்நிலைய காவலர்கள் சசிகுமாரை அழைத்து வந்து தாக்கி மொத்தம் 6 லட்சரூபாய் கடன் பெற்றதாக எழுதி வாங்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த சசிகுமார் சானிட்டைசர் அருந்தி ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சசிக்குமாரின் மனைவி வனிதா திருவல்லிக்கேணி துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தன் கணவரை தாக்கிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் அந்த புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00