தமிழ்நாட்டில் மேலும் 5,516 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 993 ஆக உயர்வு

Sep 20 2020 6:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 516 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்‍கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம், பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 993 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 516 பேர் வைரஸ் தொற்றுக்‍கு ஆளாகி இருப்பதாக, தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட மருத்துவ அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கொரோனா வைரசால் இதுவரை பாதிக்‍கப்பட்டுள்ளோர் எண்ணிக்‍கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 993 ஆக உயர்ந்துவிட்டது. இன்று ஒரேநாளில், கொரோனா வைரஸ் காரணமாக 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 8 ஆயிரத்து 811-ஆக அதிகரித்துவிட்டது.

சென்னையில் இன்று ஒரேநாளில் 996 பேர், வைரஸ் தொற்றுக்‍கு ஆளாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 639 பேர் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் இன்று 568 பேர் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். கடலூரில் 297 பேருக்‍கும் சேலத்தில் 291 பேருக்கும் செங்கல்பட்டில் 283 பேருக்கும் திருவள்ளூரில் 207 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00