அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிப் பணிகள் - புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது - கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

Sep 21 2020 8:18AM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், பல்வேறு மாவட்டங்களில் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாநகர் மாவட்ட கழகம் சார்பில், பாளையங்கோட்டை பகுதி கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில், இளைஞர்களை கட்சியில் அதிகமாக சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. S. பரமசிவ ஐயப்பன், நெல்லை மாநகர மாவட்ட கழக பொருளாளர் திரு. ஜோதி ராஜ், பாளையங்கோட்டை பகுதி கழக செயலாளர் திரு. ரமேஷ் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். புதுக்கோட்டை மத்திய மாவட்டம், திருவரங்குளம் மேற்கு ஒன்றிய மற்றும் ஆலங்குடி பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய மாவட்ட செயலாளர் திரு. டி.விடங்கர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.ஆர்.வி. பொட்டு, ஆலங்குடி பேரூர் கழக செயலாளர் திரு. இளங்கோ, திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. ராபர்ட் கென்னடி உள்ளிட்டோர் இந்தக்‍ கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் மணல்மேல்குடியில் நடந்த நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆய்வுக் கூட்டத்தில், மாற்றுக்‍கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர். ஒன்றிய செயலாளர் திரு. அலி அக்பர், மாவட்ட செயலாளர் திரு. சிவசண்முகம், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திரு. கார்த்தி சேவுகப்பெருமாள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இதனிடையே, திருச்சி வடக்கு மாவட்டம், உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு பேச்சியம்மன் ஆலயத்தில், தியாகத் தலைவி சின்னம்மா உடல் ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கழக தலைமை நிலையச் செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான திரு. ஆர். மனோகரன் தலைமையில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல வளநாடு பகுதியில் உள்ள பெருமாள் ஆலயத்தில் தியாகத் தலைவி சின்னம்மா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00