நாகை மாவட்டத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் 6 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு : பொதுப் பணித்துறையைக் கண்டித்து போராட்டம்

Sep 21 2020 9:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டத்தில், பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடாததால் 6 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்‍கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், பொதுப்பணித் துறையினரைக்‍ கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள திட்டை, தில்லைவிடங்கன் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் 6 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதிகளில் உள்ள ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்காலில் பொதுப்பணித்துறையினர் தண்ணீர் விடாததால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியப் போக்‍கைக்‍ கண்டித்தும், கழுமலை ஆற்றில் உடனடியாக தண்ணீர் விடக்‍கோரியும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் அருகே, கோட்டூரில் திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மதுரை திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை கிராமத்தில், ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்‍கு ஆதரவாக தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்‍கும் வகையில், கிராம மக்‍கள், அரைமணி நேரம் தங்களது வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து, நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, இறால் குட்டையில் பணியின்போது உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு தராமல் இழுத்தடித்த உரிமையாளரைக்‍ கண்டித்து, இறால் குட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் கிராம மக்களால் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் அமைக்கபட்டத்தில் கட்டுமான தவறுகளால் துறைமுகம் நுழை வாயலில் ஏற்பட்டுள்ள மண் திட்டுகளில் படகுகள் மோதி கடந்த மாதம் மூன்று மீனவர்கள் பலியாகினர். மேலும் உயிர் பலி ஏற்படாமல் இருக்க துறைமுகத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சின்னத்துறை உள்ளிட்ட மூன்று கடற்கரை கிராமங்களில், சி.ஐ.டி.யு சேர்ந்த தமிழ்நாடு மீன் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம், செந்துறையில், தேசிய கல்விக்கொள்கை மற்றும் நீட் தேர்வை திரும்பப்பெறக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை திரும்பப்பெற கோரியும் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00