அமமுக அமைப்புச் செயலாளர் சிவராஜ் உடலுக்கு மக்கள் அஞ்சலி : ஏராளமான கழக நிர்வாகிகள், தொடண்டர்கள் மலர் அஞ்சலி

Sep 21 2020 10:53AM
எழுத்தின் அளவு: அ + அ -
உடல் நலக்‍குறைவால் காலமான அம்மா மக்‍கள் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் திரு. சிவராஜ் உடலுக்‍கு கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்‍களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.எஸ்.சிவராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் காலமானார். அவருக்‍கு வயது 65. திரு. சிவராஜ், உடல் சொந்த ஊரான திருக்கோவிலூருக்‍கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அவரது இல்லத்தில் வைக்‍கப்பட்டது. அங்கு உறவினர்கள் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து திரு. சிவராஜ் உடல், திருக்கோவிலூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரு.எஸ்.சிவராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திருக்கோவிலூரில் உள்ள அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.

மறைந்த திரு.எஸ்.சிவராஜ், ரிஷிவந்தியம் தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தகக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00