தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்‍கான துணைத் தேர்வுகள் இன்று தொடக்‍கம் - பல்வேறு மையங்களில் ஒரு லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

Sep 21 2020 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்‍கான துணைத் தேர்வுகள் இன்று தொடங்கின.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு தனித்தேர்வுகள், 8ம் வகுப்பு தனித்தேர்வு, தொடக்கக் கல்வி டிப்ளமோ முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு, உடற்கல்வி இரண்டாம் ஆண்டு, இசைப்பள்ளி துணை தேர்வுகள் நடைபெறுகின்றன. தனித்தேர்வர்களுக்‍கான துணைத்தேர்வு இன்று தொடங்கி, அக்‍டோபர் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு துணை பொதுத்தேர்வுகள் மட்டும் இன்று தொடங்கின. 11ம் வகுப்பு துணைத் தேர்வு வரும் 29-ம் தேதி தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். 10-ம் வகுப்பு தேர்வில் மட்டும் 38 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக, தேர்வு மையங்களில் சானிடைசர் பயன்படுத்தப்படுகிறது. உடல் வெப்ப பரிசோதனைக்‍குப் பிறகே தேர்வர்கள் அனுமதிக்‍கப்படுகின்றனர். சமூக இடைவெளியுடன், ஒரு அறைக்‍கு 10 பேர் மட்டுமே அமர வைக்‍கப்பட்டுள்ளனர்.

தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரை நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 32 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00