இந்தி மொழி தெரியாததால் கடன் தர மறுப்பு- வங்கி மேலாளருக்கு எதிராக ஓய்வு பெற்ற மருத்துவர் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்

Sep 22 2020 11:06AM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியலூரில் இந்தி மொழி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளருக்கு எதிராக ஓய்வு பெற்ற மருத்துவர் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஓய்வு பெற்ற அரசு தலைமை மருத்தவரான பாலசுப்பிரமணியன், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். வங்கி மேலாளரான மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் பட்டேல், இந்தி மொழி தெரியுமா என பாலசுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார். அவர் தெரியாது என கூறியதால் பாகுபாடு காட்டிய வங்கி மேலாளர், அனைத்து ஆவணங்கள் இருந்தும் கடன் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டிற்கு திரும்பிய பாலசுப்பிரமணியன் இந்தி மொழி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளர் மீது மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00