தமிழகத்தில் ஒரே நாளில் 90 சவரன் நகை கொள்ளை : அதிகரிக்கும் கொள்ளை சம்பவங்களால் மக்கள் அச்சம்

Sep 22 2020 8:19AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடுத்துள்ள சென்னமநாயக்கன்பட்டி ஏழுமலையான் நகர் பகுதியில், வழக்கறிஞர் வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள், வீட்டின் உள்ளே இருந்த இரண்டு பீரோக்களை உடைத்து, 40 சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில், அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 40 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்த புகாரைப் பெற்ற போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் கொள்ளை நடந்த வீட்டிற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல்லில் உள்ள ஒரு உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து, அதிலிருந்த 10 சவரன் தங்க நகைகள், இரண்டு வளையல்கள், ஒரு லேப்டாப் ஆகியவை கொள்ளையடித்துச் சென்றது குறித்து போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில், திருச்சி ராம்ஜி நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் குமார், மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சஜீவ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00