மேட்டுப்பாளையம் அருகே யானைகள் வழித்தடத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய நெடுஞ்சாலைத்துறை - விரிவாக்கப் பணியை கைவிட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Sep 22 2020 10:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையையொட்டி யானைகள் வழித்தடத்தில் மீண்டும் நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் விரிவாக்கப் பணிகளை தொடங்கியுள்ளனர். இது யானைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அப்பணியை உடனடியாக கைவிடுமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களில் அண்மைக்காலமாக யானைகளுக்கான வழித்தடங்கள் அழிக்கப்பட்டு சாலைகள், விடுதிகள் போன்றவை அமைக்கப்படுகின்றன. குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் வடுகன் தோட்டம், இச்சிமரம் வழித்தடம் யானைகளின் வலசையாக உள்ளது. இவ்வழியாக சென்றுதான் பெரும்பாலான யானைகள் நீர்நிலைகளில் தண்ணீர் அருந்துகின்றன. ஆனால் அதனை அலட்சியம் செய்துவிட்டு நெடுஞ்சாலைத்துறை திடீரென சாலை விரிவாக்கப் பணியை மேற்கொண்டது. அதற்கு வனத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இப்பணியை கைவிட நெடுஞ்சாலைத்துறை ஒப்புக்கொண்டது. ஆனால் தற்போது 6 மீட்டர் அளவுக்கு மட்டுமே யானைகளுக்கென இடம் விட்டு மற்ற இடங்களில் மீண்டும் விரிவாக்க பணியை நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் யானைகள் வழி தெரியாமல் திகைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விரிவாக்கப் பணியை உடனடியாக கைவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00