திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 3 பேர் உயிரிழப்பு - மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆக்சிஜன் இன்றி 3 மணி நேரமாகத் தவித்து உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல்

Sep 22 2020 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 3 பேர் உயிரிழந்தனர். மின்சாரம் துண்டிக்‍கப்பட்டதால் ஆக்‍சிஜன் இன்றி 3 மணி நேரமாக தவித்து நோயாளிகள் மூவரும் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரோனா சிறப்பு வார்டில் 100க்‍கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் அருகிலேயே தனிமைப்படுத்தல் மையம் அமைக்‍கப்பட்டுள்ளது. இதில் கொரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்தவர்கள் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். இதில் சிலருக்‍கு மூச்சுத்திணறல் காரணமாக ஆக்‍சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்‍கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்‍கப்பட்டிருந்த யசோதா, கவுரவன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். 3 மணி நேரமாக மின்தடை ஏற்பட்டு செயற்கை சுவாசம் தடைபட்டதன் காரணமாக, நோயாளிகள் உயிரிழந்ததாக, அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00