அரியலூரில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், தார்ப்பாய் மற்றும் சாக்குகள் பற்றாக்குறை - நெல்மணிகள் சாலையில் கொட்டிக்‍கிடக்‍கும் அவலம்

Sep 22 2020 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியலூரில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், தார்ப்பாய் மற்றும் சாக்குகள் பற்றாக்குறையால், நெல்மணிகள் சாலையில் கொட்டிக்‍கிடக்‍கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், திருமழபாடி கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து நெல்லை முழுமையாக கொள்முதல் செய்யாததால், கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த நெல்லை, சாலைகள் மற்றும் திறந்தவெளியில் கொட்டி விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். இந்த நெல்லை சாதாரண தார்ப்பாய் போட்டு மூடியுள்ளதால், சாலையில் செல்லக்கூடிய கால்நடைகள் மற்றும் பன்றிகள் நெல்லை சேதப்படுத்துகின்றன. மேலும், கொள்முதல் செய்யப்பட்டு மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்லை அரவைக்கு கொண்டு செல்லாமல் தேக்கமடைந்துள்ளன. நெல்லை கொள்முதல் செய்து மூட்டையாக அடுக்கி வைக்‍க இடமோ, சாக்குகளோ இல்லாததால், நெடுஞ்சாலையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நெல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00