கிசான் திட்ட ஊழல் வழக்கில் ஒப்பந்த ஊழியர்கள் 4 பேரை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை - கள்ளக்குறிச்சியில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டு 15 கோடி ரூபாய் பணம் மீட்பு

Sep 23 2020 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கிசான் திட்ட ஊழல் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை 15 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மை துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்று கொண்டு போலியாக ஆவணங்களை தயாரித்து, விவசாயிகளே இல்லாத ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை, கிசான் திட்டத்தில் சேர்த்து நிதியுதவி பெற்றுத் தந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் வங்கி கணக்குகளில் இருந்து 15 கோடியே 20 லட்சம் ரூபாய் பணத்தை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்ட 16 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருநாவலூர் வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வரும் மாரிமுத்து, கலைச்செல்வன், சிலம்பரசன், மணிகண்டன் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00