சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனுக்கு ஜாமீன் மறுப்பு - வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Sep 23 2020 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனின் ஜாமீன் மனு மீதான விசாரணை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சிறுமிக்‍கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்‍கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜாமின் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்‍கு இன்று நீதிபதி திரு. பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நாஞ்சில் முருகேசனுக்கு ஜாமீன் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். விசாரணையின்போது, நாஞ்சில் முருகேசனுக்‍கு எதிராக நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். பெற்ற தாயுடன் சேர்ந்து இளம் பெண்ணின் வாழ்கையை ஒரு பொறுப்பில் உள்ள ஒருவர் வீணடித்ததை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என கேட்ட நீதிபதி, முருகேசனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். மேலும் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00