கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஜினி, கமல் திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் - தனிமைப்படுத்துதலுக்கு தயாராகும் படக்குழுவினர்

Sep 24 2020 9:28AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருந்த ரஜினி, கமல் திரைப்படங்களுக்கான படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்காக படக்குழுவினர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்ட ரஜினிகாந்தின் "அண்ணாத்த", கமல்ஹாசன் நடிக்கும் புதிய படம் ஆகியவற்றின் படப்பிடிப்புகளை அடுத்த மாதம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனையடுத்து, இருவரும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தயாராகி வருகிறார்கள். இதற்காக நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அடங்கிய படக்குழுவினர் அனைவரும் அவரவர் வீட்டிலேயே 2 வாரத்துக்கு தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். "அண்ணாத்த" படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அடுத்து வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அதனை ரத்து செய்து விட்டு, சென்னை மற்றும் ஐதராபாத்தில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 5 நாயகிகள் நடிக்கும் இந்தப் படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

கமலின் புதிய படத்தின் படப்பிடிப்பை சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அவருக்கு 232-வது படமாகும். படத்துக்கு "எவனென்று நினைத்தாய்" என்று பெயர் வைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "குரு" என்ற பெயரை பரிசீலிப்பதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே "குரு" பெயரில் கமல்ஹாசன் ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த படம் 1980-ல் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00