மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்‍கு வலுக்‍கும் எதிர்ப்பு - சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்‍கணக்‍கான விவசாயிகள் கைது

Sep 24 2020 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள், சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி உரிமை மீட்பு குழு சார்பில், தஞ்சை ரயில் நிலையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சட்ட நகலை எரித்து, மத்திய-மாநில அரசுகளுக்‍கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல், காவிரி உரிமைக்குழு சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்‍கும் மேற்பட்ட விவசாயிகள், காவிரி உரிமை மீட்புக்‍குழுவைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, வேளாண் சட்ட நகலை எரித்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய அரசின் விவசாய திருத்தச் சட்டங்களை கண்டித்து மயிலாடுதுறையில் நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியினர், பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன் மற்றும் 100க்‍கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00