சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்‍கத்திற்காக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் - நீதிமன்ற உத்தரவுப்படி புதிய மரக்கன்றுகள் நடப்பட்டதா என நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதிமன்ற ‍கிளை கேள்வி

Sep 24 2020 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்‍கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்‍கு பதிலாக எத்தனை மரக்‍கன்றுகள் நட்டு வளர்க்‍கப்பட்டுள்ளன? என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய இயக்குநர்கள் பதிலளிக்‍கவும் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த ஆனந்தமுருகன் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்‍கல் செய்த மனுவில், சாலை விரிவாக்‍கத்திற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் லட்சக்‍கணக்கான மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், மீண்டும் மரக்கன்றுகள் நடப்படவில்லை என்றும், உயர்நீதிமன்றத்தில் அளித்த உறுதிப்படி மரக்‍கன்றுகள் நடப்படாததால் அவமதிப்பு நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்றும் கோரியுள்ளார். மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரம் வெட்டினால், 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் - அவ்வாறு பராமரிக்கவில்லை எனில் சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்ட வேண்டாம் எனவும் தெரிவித்தனர். சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்‍கு பதிலாக எவ்வளவு மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன? என்பது குறித்து சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய இயக்குநர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 5-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00