இந்திய நீதித்துறை வரலாற்றில் இல்லாத புதுமை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக ஒரே நேரத்தில் பதவியேற்கும் கணவன்-மனைவி

Sep 25 2020 11:09AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத புதுமையாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக கணவன்-மனைவி ஒரே நேரத்தில் பதவி ஏற்க உள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 10 மாவட்ட முதன்மை நீதிபதிகளை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இவர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளார்.

இதில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகள் கிடைத்துள்ள நிலையில், அந்த 10 பேரில் இருவர் கணவன்-மனைவி என்பது புதுமையான நிகழ்வாக கருதப்படுகிறது. கணவன் மனைவியான நீதிபதிகள் திரு. கே.முரளிசங்கர், திருமதி எஸ்.டி.தமிழ்செல்வி ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி திரு. கே.முரளிசங்கர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த நீதிபதி எஸ்.டி.தமிழ்செல்வியும், கடந்த 1968-ம் ஆண்டு பிறந்தவர்கள். சட்டப்படிப்பை முடித்து 1995-ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டு பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தற்போது பதவி உயர்வு பெற்று மாவட்ட முதன்மை நீதிபதியாக உள்ளனர். திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியாக திரு. கே.முரளிசங்கரும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதித்துறை பதிவாளராக நீதிபதி திருமதி எஸ்.டி.தமிழ்செல்வியும் பணியாற்றி வருகின்றனர். நீதிபதிகளாக இருக்கும் கணவன், மனைவி இருவரும் ஒரே நேரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்க இருப்பது, இதுவே முதல் முறை என வழக்‍கறிஞர்கள் மத்தியில் பெருமையாக பேசப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00