வேளாண் சட்டத்திற்கு எதிராக சென்னையில் மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாலை மறியல் - மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது

Sep 25 2020 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைப்புகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்திலும் இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகின்றன. தாம்பரத்தில் இன்று மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்​திரு. கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். மத்திய அரசுக்‍கு எதிராக அவர்கள் அனைவரும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தின்போது திடீரென அவர்கள் சாலை​மறியலில் ஈடுபட்டனர். திரு. கே. பாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00