திரைத்துறையில் கோலோச்சிய எஸ்.பி.பி. மறைந்தார் - பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக ஆற்றலை வெளிப்படுத்தியவர்

Sep 25 2020 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடல் மட்டுமின்றி திரையுலகின் பல துறைகளிலும் கோலோச்சி சாதனை படைத்துள்ளார்.

இளம் வயதில் பாடகராக திரையுலகிற்கு அறிமுகமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசைமைப்பாளர், நடிகர் என பன்முக ஆற்றலை வெளிப்படுத்தியவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்காக அடிமைப்பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா என்ற முதல் பாடல் மூலம் புகழின் உச்சத்தை எட்டியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். உச்ச நடிகர்களுக்‍கு அவர்களது குரலைப்போல் பாடும் ஆற்றலையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெற்றிருந்தார். மின்சார கனவு படத்தில் இவர் பாடிய தங்கத்தாமரை மகளே என்ற வித்தியாசமான பாடல் அனைவரையும் கவர்ந்தது.

பாடல் மட்டுமல்லாமல் நடிப்பிலும் ஆர்வம் கொண்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சிகரம், கேளடிகண்மணி, காதலன், பிரியமானவளே, மின்சார கனவு என பல்வேறு திரைப்படங்களில் தோன்றி அசத்தினார்.

இனிமையான பாடல்களை வெவ்வேறு தோரணையில் பாடி உச்சத்தைத் தொட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளராகவும் பரிணாமம் பெற்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00