காந்த குரலோன் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் - ரசிகர்கள் இறுதி அஞ்சலி

Sep 26 2020 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் தாமரைப் பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் அவருக்கு மரியாதை செலுத்தினர்.

மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் நேற்று இரவு தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஷ்வரி ரவிக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இயக்குனர்கள், பாரதிராஜா, அமீர், பாடகர் மனோ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். எஸ்.பி.பி.சரணுக்கு அவர்கள் ஆறுதல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அவரது மகன் சரண் சடங்குகளை செய்தார்.

எஸ்.பி.பி.யின் உடல் போலீசார் புடைசூழ ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 72 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்‍கம் செய்யப்பட்டது. மகன் சரண், இறுதிச்சடங்குகளைச் செய்தார். நெருங்கிய உறவினர்கள் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர்.

எஸ்.பி.பி.யின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டு பாட்டுத் தலைவனுக்கு கண்ணீர்மல்க பிரியா விடை அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00