காவல் நிலையத்தில் பெறப்படும் குற்றவியல் வழக்குகளில் அனைத்திலும் விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

Sep 26 2020 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
காவல் நிலையத்தில் பெறப்படும் குற்றவியல் வழக்குகளில் அனைத்திலும் விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த திரு. ராஜ பிரபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், எதிர் வீட்டு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க தான் உதவியதாகவும், பின்னாளில் அவர் விவாகரத்து பெற்றார் என்றும், இதற்கு, தான் காரணம் எனக்கூறி, தன்னை கல்லால் தாக்கியதாகவும் தெரிவித்திருந்தார். இது குறித்து அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி திரு. பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குற்றவியல் நடைமுறை சட்டப்படி பெறப்படும் ஒரு புகாரில் முகாந்திரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் முறைப்படி விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - இதில், எந்தவித தாமதமும் இருக்க கூடாது - இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது நியாயமற்றது - எனவே, ஒரு மாதத்திற்குள் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை விசாரணை அதிகாரி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00