சாத்தான்குளம் இரட்டைக்‍கொலை வழக்‍கு - 9 காவல் அதிகாரிகள் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்‍கல்

Sep 26 2020 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகன், போலீசாரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டதையடுத்து, கடந்த சில நாட்களாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

சி.பி.ஐ. அதிகாரிகள், புதுடெல்லி தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட 17 பேர் கொண்ட குழுவினர் சாத்தான்குளம் காவல்நிலையம், கோவில்பட்டி கிளைச்சிறை உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு செய்தனர். தற்போது விசாரணை முடிவடைந்த நிலையில், மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவலர் பால்துரை இறந்துவிட்ட நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களுக்கு எதிராக, சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தந்தை-மகன் இருவரும் காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 9 காவலர்கள் மீதும் கொலை, கூட்டுச்சதி உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00