அதிமுக செயற்குழுவில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். இடையே பகிரங்கமாக வெடித்த மோதல் - முதலமைச்சர் வேட்பாளராக இ.பி.எஸ்ஸை ஏற்க முடியாது என ஓ.பி.எஸ். ஆவேசம்

Sep 28 2020 4:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக, அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ். இடையே கடும் வாக்‍குவாதம் ஏற்பட்டது.

அ.தி.மு.கவின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து, இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வந்தது. இருவரும் தங்கள் ஆதரவாளர்கள் மூலம், மாறிமாறி தான்தான் முதலமைச்சர் என கூறிவந்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்வதற்காக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், செயற்குழுக்‍ கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதலமைச்சர் பதவி குறித்து இ.பி.எஸ். -ஓ.பி.எஸ். இடையே கடும் வாக்‍குவாதம் ஏற்பட்டது.

இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகத்தான், துணை முதலமைச்சராக இருக்‍க தான் சம்மதித்ததாக ஓ.பி.எஸ். தெரிவித்தார். தன்னை முதல்வராக்‍கியது அம்மாதான் என்றும், இ.பி.எஸ்ஸை மக்கள் முதலமைச்சராக்‍கவில்லை எனவும், சின்னம்மாதான் இ.பி.எஸ்.ஸை முதலமைச்சராக்‍கினார் என்றும் ஓ.பி.எஸ். தெரிவித்தார்.

அப்போது குறுக்‍கிட்ட இ.பி.எஸ்., இருவரையுமே முதலமைச்சராக்‍கியது சின்னம்மாதான் என்றும், யார் முதலமைச்சராக்‍கினார் என்பது முக்‍கியமல்ல - எப்படி சிறப்பாக ஆட்சி நடைபெறுகிறது என்பதுதான் முக்‍கியம் என்றும் தெரிவித்தார். தனது ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாக பிரதமர் மோதியே பாராட்டியிருப்பதாக இ.பி.எஸ். பதிலளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவி மோகத்தால் ஏற்பட்டுள்ள இந்த வாக்‍குவாதம் செயற்குழு உறுப்பினர்களிடையேயும், கட்சியினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், வெறுப்பையும் ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் பிரச்னை காரணமாக வரும் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அறிவிக்‍கப்படும் என, கட்சித்தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00