நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்றும்படி வற்புறுத்தகூடாது - தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Sep 30 2020 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்றும்படி வற்புறுத்தகூடாது என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2017-ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்துகொள்ளும் மாணவிகள், ஆபரணங்கள் அணியக்‍கூடாது, பர்ஸ் வைத்திருக்கக்‍கூடாது, கைகடிகாரம் அணியக்‍கூடாது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்‍கப்படுகின்றன. இந்த கட்டுப்பாடுகளால் மாணவர்கள் பெரும் இன்னலுக்‍கு ஆளாவதாகக்‍கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்‍கறிஞர் அரவிந்த் ராஜ் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்‍கல் செய்துள்ளார். அந்த மனுவில், நீட் தேர்வில் கலந்துகொள்ளும் திருமணமான விண்ணப்பதாரர்கள், தாங்கள் புனிதமாகக்‍ கருதும் தாலி, மெட்டி மற்றும் காதணி, மூக்குத்தி போன்றவற்றை அகற்றும்படி நிர்பந்திக்கபடுவதாக குறிப்பிட்டுள்ளார். தேர்வறையில் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், ஆபரணங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதமானது - அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் எனக்‍கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00