தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் காவலர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு - சாத்தான்குளம் இரட்டைக்‍கொலை வழக்‍கில் சி.பி.ஐ நிலை அறிக்‍கை அளிக்‍கவும் ஆணை

Sep 30 2020 2:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் காவலர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து, சிபிசிஐடி போலீசார் பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை-மகன் காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, வழக்கு விசாரணை குறித்த நிலை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. அதில், தந்தை-மகன் கொலை செய்யப்பட்டதில், இரண்டு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து, மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் துன்புறுத்தப்பட்ட மற்றொரு கைதியான ராஜாசிங் வழக்கு குறித்து, சிபிசிஐடி போலீசாரும் நிலை அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கைதி ராஜாசிங் மற்றும் மார்டின் போலீசாரால் தாக்கப்பட்டது குறித்தும், தட்டார்மடத்தில் செல்வன் கடத்தி கொலை செய்யப்பட்டதில், தட்டார்மடம் காவலர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும் சிபிசிஐடி போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் தரப்பில் தற்போது வரை நடைபெற்ற விசாரணை குறித்து, மீண்டும் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை, நவம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00