நீட் தேர்வில் அசத்திய தமிழக மாணாக்‍கர்கள் - இந்திய அளவிலான அரசுப்பள்ளிகளில் தேனி மாவட்ட மாணவன் முதலிடம் பிடித்து சாதனை

Oct 17 2020 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
நீட் தேர்வில் அகில இந்திய அரசு பள்ளி மாணாக்‍கர்களில் தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தேனி மாவட்டம் டி.வாடிப்பட்டியைச் சேர்ந்த ஜீவித்குமார் என்ற மாணவர், சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்தார். அவரது தந்தை நாராயணசாமி ஆடு மேய்க்‍கும் கூலி தொழிலாளி ஆவார். தாயார் பரமேஷ்வரி தையல் தொழிலாளியாக உள்ளார். இந்நிலையில், ஜீவித்குமார் நீட் தேர்வில் 664 மதிப்பெண் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் அரசுப் பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாணவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சென்ற முறை நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற ஜீவித் குமாரை, ஆசிரியர்கள் முயற்சி எடுத்து ஊக்‍கப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் அவர் இம்முறை அதிக மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளார்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் இந்த சாதனையை படைக்க முடிந்ததாக மாணவர் ஜீவித் குமார் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00