தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம் - நாமக்‍கல் நகர ஊராட்சி அலுவலகத்தில் கட்டுக்‍கட்டாக பணம் பறிமுதல்

Oct 17 2020 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாமக்கல் மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்‍கில் வராத 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல்​செய்துள்ளனர்.

நாமக்கல்லில் பரமத்தி சாலையில் உள்ள நகர ஊரமைப்பு மேம்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனை பிரிவுக்கு அனுமதி வழங்குவதில் அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இடைத்தரகர்கள் ஆதிக்கமும் அதிக அளவில் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி திரு.ஜெயக்குமார், நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் நல்லம்மாள் ஆகியோர் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை தனிப்படை போலீசார் நேற்று ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து அலுவலகத்தின் உதவி இயக்குனர், கண்காணிப்பாளர் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00