கடலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்தரரெட்டி ஆய்வு

Oct 18 2020 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் திரு. பனீந்தரரெட்டி, ஆய்வு மேற்கொண்டார்.

மாநில அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருமான திரு.பனீந்தரரெட்டி, கடலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நகராட்சி பகுதிகளிலும், மழைக்காலங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ள குறிஞ்சிப்பாடி வட்டத்தில் கல்குணம் மற்றும் கொளக்குடி பகுதியிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். மழைக்காலங்களில் வடிகால்களை தூர்வாரி, பொதுமக்களுக்கும், விவாசாய நிலங்களுக்‍கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் சரிசெய்யுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்‌. கொளக்குடி பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை வருவாய் நிர்வாக ஆணையரிடம் விவசாயிகள் எடுத்துரைத்தனர்.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காலங்களில் பேரிடர் ஏற்பட்டால் பொதுமக்களை எவ்வாறு காப்பது என்பது குறித்த பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி, நாகை மாவட்டம் திருக்கண்ணங்குடியில் நடைபெற்றது. தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், வெள்ளத்தில் சிக்கி கொள்ளும் மக்களை எப்படி மீட்பது, அவர்களுக்கு முதலுதவி எவ்வாறு அளிப்பது என்பது குறித்து செயல் விளக்க காட்சிகள் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. இயற்கை சீற்றங்களினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவது மற்றும் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்தற்கான கருவிகளை எவ்வாறு கையாள்வது குறித்தும் செயல்விளக்க பயிற்சி அளிக்‍கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00