டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு விவகாரம் - மேலும் 26 பேரை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி.

Oct 18 2020 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு தொடர்பாக, மேலும் 26 பேரை கைது செய்துள்ளதாக சிபிசி‌ஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் - 4, குரூப் - 2ஏ, வி.ஏ.ஓ., தேர்வு முறைகேடு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், சென்னையைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயகுமார் உள்ளிட்ட 51 பேரை, ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா காரணமாக, இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., - ஐ.ஜி., திரு. சங்கர் தலைமையிலான போலீசார், இது தொடர்பாக கடந்த வாரம் 20 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக, மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00