திருவண்ணாமலையில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Oct 18 2020 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலையில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம் உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருவண்ணாமலை அடுத்த இனம்காரியந்தல் பகுதியில் அமைந்துள்ள கவுத்திமலை, வேடியப்பன் மலையில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வேங்கிக்கால் ஏரியில் தண்ணீர் நிரம்பியது. 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேங்கிக்கால் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதேபோல் ஆடையூர், தேவனந்தல் உள்ளிட்ட கிராமங்களில் ஏரிகள் முழுமையாக நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. வேங்கிக்கால், தேவனந்தல், ஆடையூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் நெல் உள்ளிட்ட விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00