மருத்துவப் படிப்புகளுக்‍கான 50 சதவீத இடஒதுக்‍கீடு இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, பெருத்த ஏமாற்றமளிக்கிறது : அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து

Oct 27 2020 11:00AM
எழுத்தின் அளவு: அ + அ -
மருத்துவப் படிப்புகளுக்‍கான மத்திய தொகுப்பு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்‍கு நடப்பாண்டில் 50 சதவீத இடஒதுக்‍கீடு இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவப் படிப்புகளுக்‍கான மத்திய தொகுப்பு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்‍கு நடப்பாண்டில் 50 சதவீத இடஒதுக்‍கீடு இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த பாதிப்புக்‍கு காரணமான நிலைப்பாட்டை எடுத்த மத்திய அரசுக்‍கும், மறைமுகமாக அதற்குத்துணை போன பழனிசாமி அரசுக்‍கும், 2007ம் ஆம் ஆண்டு மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, இந்த சமூக அநீதியை ஆரம்பித்து வைத்து, இப்போது நாடகமாடும் தி.மு.க.வுக்‍கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக்‍ கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட மக்‍களுக்‍கு கிடைக்‍க வேண்டிய இடஒதுக்‍கீட்டு உரிமையைக்‍ காப்பாற்றுவதற்கான சட்டப்படியான நடவடிக்‍கைகளில் இனியாவது பழனிசாமி அரசு அக்‍கறையோடு செயல்பட வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00