கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல் - மீன் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் கரை திரும்பிய மீனவர்கள்

Oct 27 2020 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், விரட்டியடிப்பதும் கைது செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், தனுஷ்கோடி ஆதம்பாலம் பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றபோது அவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த தாக்குதலில் மீனவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படை சேதப்படுத்தி உள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இலங்கை கடற்படை அட்டூழியத்தால் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரை திரும்பினர். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்‍கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00