ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல்

Oct 27 2020 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
பேரவைக்குள் குட்கா பொருட்கள் கொண்டு வந்தது தொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு, தனி நீதிபதி விதித்த தடையை நீக்கக்கோரி, தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு வந்த புகாரில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு 2வது முறையாக உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தார். இந்த தடையை நீக்க கோரியும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, உரிமைக்குழு சார்பில் சட்டமன்ற செயலாளர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.மனுவை விசாரித்த தலைமை நீதிபதி திரு. சாஹி தலைமையிலான அமர்வு, இடைக்கால தடையை நீக்க மறுத்ததுடன், மேல்முறையீடு மனுக்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

இந்நிலையில், உரிமைக்குழு நோட்டீசுக்கு விதித்த தடையை நீக்கக்‍ கோரி தனி நீதிபதி முன்பாக இருக்கும் வழக்கில் பேரவை செயலாளர் திரு. கே.சீனிவாசன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00