கடந்த 2017-ஆம் ஆண்டுக்கு பின்னர், சென்னையில் ஒரேநாளில் அதிகளவு மழை பதிவு - மேலும் 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை

Oct 29 2020 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பருக்கு பின்னர், சென்னையில் ஒரேநாளில் அதிகளவு மழை ​பெய்துள்ள நிலையில், மேலும் 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததைத் தொடர்ந்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால், சென்னையின் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

இதனிடையே சென்னையில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அவற்றின் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 மணி நேரம் இடைவிடாமல் சென்னையில் 20 செமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மயிலாப்பூரில் 200 மிமீ மழை பெய்துள்ளது. டிஜிபி அலுவலகம் 178 மி. மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 114 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. கடந்த 2017 ஆண்டு நவம்பருக்கு பின் சென்னையில் தற்போது ஒரே நாளில் அதிகளவு மழை பெய்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00