பாதிக்‍கப்பட்ட சாலையை விவசாயிகளே சீரமைத்த போதும் தடுத்து நிறுத்திய அதிகாரிகள் - பணியின்போது பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி. வாகனத்தையும் பறிமுதல் செய்ததால் விவசாயிகள் கொந்தளிப்பு

Nov 21 2020 10:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனி மாவட்டம் போடி அருகே கண்மாய் பகுதிக்‍குச் செல்லும் பாதையை விவசாயிகள் சீரமைத்தபோதும், அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்ததோடு, ஜே.சி.பி. வாகனத்தையும் பறிமுதல் செய்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.

போடி நாயக்‍கனூர் அருகே உள்ள புதுக்‍கோட்டை என்ற கிராமத்தில் கட்டபொம்மன் கண்மாய் அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டு, அந்த கண்மாய்க்‍கு செல்லும் பாதை சேதமடைந்தது. இதனை சீரமைக்‍க பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் நடவடிக்‍கை எடுக்‍கப்படாததால், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளே அப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜே.சி.பி. எந்திரத்தைக்‍ ​கொண்டு 200க்‍கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கிராம நிர்வாக அதிகாரி, ஓடை மணல் அள்ளப்படுவதாகக்‍ கூறி போலீசார் உதவியுடன் அப்பணியை தடுத்து நிறுத்தியதோடு, வாகனத்தையும் பறிமுதல் செய்தார். இது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பறிமுதல் செய்யப்பட்ட ஜே.சி.பி. இயந்திரத்தை உடனடியாக விடுவிக்‍க வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00